பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Oct 2015

பாட்டியற்றுக - 10



நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 10" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***

30 Oct 2015

பாட்டியற்றுக 10 இன் தொகுப்பு




அன்பு நண்பர்களே கவிஞர்களே வணக்கம் !

பாட்டியற்றுக தொகுப்பு 10
அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!! 


28 Oct 2015

முயன்று பார்க்கலாம் - 1





முயன்று பார்க்கலாம் - 1
நண்பர்களே.! இதோ முதல் பயிற்சி.

பாடல்களை நன்கு ஆழ்ந்து படித்துப் பின் எழும் ஐயங்களைக் கருத்துப் பகுதியில் கேளுங்கள். (பாடலைப் பற்றி உங்கள் உணர்வையும் பகிரலாம்.)

24 Oct 2015

சிலேடை வெண்பா - இரட்டுறமொழிதல்


நண்பரும், கவிஞருமான திரு.Venkatesan Srinivasagopalan அவர்களின் ஓயாத மடக்கு, சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த என் உள்ளத்தெழுந்த ஓர்
"‪#‎இரட்டுறமொழிதல்‬ 
இப்பாடலை அன்னாரின் தமிழ்ப்பணிக்குப் படையலாக்குகிறேன்.
வெங்கடேசனுக்கும்.- மீனுக்கும்
(இன்னிசை வெண்பா)
*******-**********-*****
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத் 
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு.!

வெங்கடேசன்.:
1. உண்ணுதல் மறந்து பாவடிப்பார்
2. அவருடைய பாக்கள்.(தோலெனின் 
பாட்டு.) மிளிரும்.
3. கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார்.
4. மடக்குப் பா, இரட்டுற மொழிதல் 
எழுதுவார்.
5. தமிழ்க் கடலில் (அவருள்ளம்.) நீந்தும்.
மீனுக்கு.:
1. உணவில் உண்ணுமாறு அடங்கும்.
2. மேல்தோலாகிய செதிள் மிளிரும்.
3. கண்கள் மூடாது. (எப்போதும்.)
4. மடங்கி,வளைந்து நீந்தும். 
துணையுடன் இணைந்து 
இரண்டாகக் காட்சித்தரும்.
5. குளிச்சியான கடலில் வாழும்.
(மற்றவர்களும் என்னை ஈர்த்தவர்களே. அனைருக்கும் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்.)
தமிழன்புன்,
பாவலர் மா. வரதராசன்

23 Oct 2015

பாட்டியற்றுக : 9 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 9 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக:9

20 Oct 2015

பாட்டியற்றுக - 9


நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 9" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
ஆசிரிய விருத்தம் (வேறு)
விளைநிலத்தை அயலானுக் 
களித்துவிட்டால் அதன்பின்னர்
விளைச்ச லின்றி
இளைத்துவிழும் நிலைதோன்றும்
அயலானைக் கையேந்தும்
இழிவே மிஞ்சும்.
உளைந்திடுமென் உள்ளத்தோ.(டு.)
இவ்விழிவை உரைத்திட்டேன்
உங்கள் முன்னே
விளைந்திடுமோர் நலன்வேண்டி...
பிழையென்றால் உரைப்பீரே
மேன்மை யோரே.!
--பாவலர் மா.வரதராசன்

19 Oct 2015

3) பழமோ வண்டோ ?


அன்புடைப் பாவலர்க்கு வணக்கம் !
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன். இதோ இவ்வாரத் துளி
3) பழமோ வண்டோ ?