பைந்தமிழ்ச் சோலைவசிகளுக்கு வணக்கம் !
தங்கள் அனைவரையும் இந்த #இலக்கியத்_தேன்துளிகள் தொடரில் சந்திப்பதில் ஆனந்தம் அடைகின்றேன். இதோ இவ்வாரத்துத் துளி !
15) கடலிலே செந்தூள் !
மிகவும் சுத்தமான வெண்மை நிறம் கொண்ட பாற்கடல் மீது அன்று திடீரெனச் சிவப்பு நிறத்தில் துகள்கள் பறந்தன. "அவை ஏன் பறந்தன அதுவும் கடலுக்கு நடுவில் திடீரென எப்படிப் பரவின?" என்று அனைவரும் ஐயம் கொள்ளக் கூடும் அதற்கான காரணத்தைக் கவிஞர் பின்னால் இப்படிக் கூறுகின்றார்.
மத்தகத்தைக் கொண்ட ஒரு ஆண் யானையைக் கொன்று அதன் தோலினை உரித்துப் போர்த்திய சிவபெருமான் தன்னுடன் சண்டையிட வந்த அழகில் சிறந்த ஆடவனான மன்மதனோடு போரிட்டு வென்று முப்புரத்தில் அவனை நெற்றிக் கண்ணின் சுடரால் எரித்தான். இந்தச் செய்தி எட்டு திக்கும் பரவி அண்டம் முழுவதும் நிறைந்தது.