உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
அறிவியலுக்கொவ்வாத
சித்திரை 1 (ஏப்ரல் மாதம். . .கடுங்கோடைக் காலம்) தமிழ்ப் புத்தாண்டென்று
நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள். . .
ஆடியில்
விதைத்துத் சுறவத்தில் (தைத்திங்கள் என்னும் சனவரியாம் .. .வாழ்வின் மலர்ச்சிக்
காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற்
கூற்றின்படி நமக்கெல்லாம் இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டாகும்.!
இக்கருத்தை
வலியுறுத்தும் முகத்தான், இத்திங்கள் முழுமையும்
புத்தாண்டாகக் கொண்டு, திருப்பாவை , திருவெம்வை வரிசையில் . . .
எந்தமிழர்
இனமோங்க, எந்தமிழின் புகழோங்க, நம் புத்தாண்டான சுறவம் திங்களைப்
பாவையாக முன்னிறுத்தித், தமிழ்கூறு நல்லுலகில்
முதன்முதலாக நான் படைத்தளிக்கும் சுறவம்பாவை பனுவல்.
ஒத்த கருத்திசைவு
கொண்டோர் இப்பனுவலை பகிர்ந்துதவுக. திருமணம் மற்றும் விழாக்களில் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அன்பளிப்பாக
இந்நூலைக் கொடுத்து இக்கருத்தைப் பரப்புக.
இந்நூலின் படக்கோப்பு (pdf) என் வலைப்பூப்
பக்கத்தில் இருக்கிறது. அதைத் தரவிறக்கி அச்சிட்டும் கொடுக்கலாம். என் வலைப்பூ
முகவரி…
Paintamizhcholai
blogspot.com மற்றும் tamilkudhir
blogspot.com
அமேசான்
கிண்டிலில் இலவசமாகவும் தரவிறக்கிப் படிக்கலாம்.
https://www.amazon.in/dp/B084RLVFKX?ref_=k4w_ss_store_lp_uc&fbclid=IwAR2nSog2mumKOeZYw3gGTkFHpusG_YA01MIzKeC3IbPw_G2heuleGxkYHRU
https://www.amazon.in/dp/B084RLVFKX?ref_=k4w_ss_store_lp_uc&fbclid=IwAR2nSog2mumKOeZYw3gGTkFHpusG_YA01MIzKeC3IbPw_G2heuleGxkYHRU
இந்தப் பணியைத் தவறாமல் செய்துதவுக
ஏனெனில், இக்கருத்தியல் எம் பெருமையை மீட்டெடுக்கக் கூடிய போர்வாள்.
செய்வீர்கள் என்ற
நம்பிக்கையுடன்,..
தமிழன்புடன். ..
மரபு மாமணி, பைந்தமிழரசு
பாவலர் மா.வரதராசன்
௧௫/.௦௧/௨௦௧௯ (15.01.2019)
1 comment:
மிகவும் அருமை நல்ல பதிவு,,, நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
Post a Comment