வரதராசன் பாக்கள் . சித்திரகவி
ஆறாரைச் சக்கரம்
மையப்புள்ளி : ற
குறட்டிலுள்ள சொல் : முதலவாநாம்.
(முதல் ஆசை நான் - ஒவ்வொரு மாந்தருக்கும் பொது)
ஆரத்திற்கு 9 எழுத்துகளும்,
வெளிவட்டச் சூட்டில்
24 எழுத்துகளும் கொண்ட "ஆறாரைச் சக்கரம் "
பாவகை : கட்டளைக் கலித்துறை
----------------------------------------------------------
வந்தவர் தம்மை வளமுற வாக்கித் தவித்திடுவார்
நொந்தா ரதனால் நுகத்தற நாற்றத் திழுக்கடைவார்
தந்தாரே தம்முடை நல்லறம் போயின் தயக்கமில்லை
வந்தார்நொந் தேயதற் கேயோர் வினையார்த்தில் லையெனுமே!
பொருள்.: நம் தமிழினத்தார் பிற நாட்டவர் எவர் வந்தாலும் அவர் வளமாக வாழச் செய்யும் பண்பைக் கொண்டவர். அதன் காரணமாக இன்னல்களும் ஏற்படத், தம் நல்லறத்தால் சேர்த்த பயனழியத் தவிக்கும் இயல்பையும் கொண்டவர்.
நம் நிலை மாற, வந்தவர்தம் நிலையடங்குமாறு வினைசெய்து, துன்பமில்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
No comments:
Post a Comment