வரதராசன் பாக்கள் .,
சித்திரகவி நான்காரைச் சக்கரம்
நான்காரைச் சக்கரம் என்பதுஒரு சித்திரக்கவி.
வட்டத்தின் நடுவிலிருந்து கீழிறங்கும் சொற்றொடர் ஆரக்கால் வழியே வலது பக்க மேலேறி இடப்பக்கம்
முதல் ஆரம் முடிய முதலடியாகவும்,
அதே ஆரத்தில் தொடங்கி இடப்பக்கம் சென்று மேல்நோக்கி வளைந்து மேலெறி உள்நுழைந்து இரணடாம் ஆரம் முடிய இரண்டாமடியாகவும்...
(இதேபோல் மற்ற அடிகளையும் கொண்டு முடிவது "#நான்காரைச்சக்கரம் "ஆகும்.
பாடலின் பொருள்...
" உன்னைத் தேடியே என்மனம் அலைகிறது. தேடுவதே என் வேலையாகவுமானது. ஆவிப் போமளவும் தேடுகிறேன். ஈடிலாத உன்னைக் குறித்த ஏடு இப்பாடல். அதற்கும் ஈடில்லை "
பாவகை - வஞ்சி விருத்தம்
தேடி யேமன மாடுதே
தேடு மாறென வாடுதே
தேடு வாவிய வீடதே
தேட வீடிலை யேடிதே!
No comments:
Post a Comment