"காரிகைக் களிப்பு " - 01
அன்புக்குரிய பைந்தமிழ்ச் சோலைப் பாவலர்களே! அனைவருக்கும் வணக்கம்.
பாட்டியற்றுக :26 மிகவும் எளிமையானதென்பதால் இன்று ஒரு புதிய போட்டி வெளியாகிறது. அது "காரிகைக் களிப்பு " என்பதாகும்
. அதாவது, கட்டளைக் கலித்துறைக்குக் "காரிகை "என்றும் பெயருண்டு. எனவே, இப்போட்டியில் நாம் காரிகை எழுதிக் களிக்கப் போவதால் இப்பகுதி "காரிகைக் களிப்பு "எனப்படுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது. . .
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குற அமைத்துச் சீரும் தளையும் சிதையா வண்ணம் ஓரடியாக்கி, அந்த அடியைக் காரிகையின் (நான்கடிகளுள்) ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள மூன்றடிகளையும் பொருள் பொருந்த அமைத்து ஒரு கட்டளைக் கலித்துறைப் பாடலை எழுத வேண்டும்.
**முக்கிய குறிப்பு "**
நீங்கள் எழுதிய பாடலை இந்தப் பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுத வேண்டும். பாடல்கள் திருத்தம் பெற்றுத் தொகுக்கும் வரை தனிப்பதிவாகப் போடுதல் கூடாது. மீறும் பாடல்கள் தொகுப்பில் சேராது. மட்டுமன்றி அதன் குறைகள், விமர்சனங்களுக்கு நானோ, பைந்தமிழ்ச் சோலையோ பொறுப்பில்லை.இதுவும் ஒரு பயிற்சியே. . .
நீங்கள் அனுப்பும் பாடல் தவறாக இருந்தால் தயங்காமல் திருத்தங்களை மேற்கொண்டு செம்மையாக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு பாடல் மட்டும் எழுதினால் போதுமானது.(கண்டிப்பாக)
அனைவரும் ஆர்வத்துடன் பங்கு பெற்று ஆதரவு தருவீர் என்ற நம்பிக்கையுடன் . ..
இறுதி நாள். . 26/03/2017 சனிக்கிழமை மாலை வரை.
இதோ முதல் பாடலுக்கான ஓரடி. . . .(கலைந்த சொற்கள். . . கவனமாகப் படிக்கவும்.)
""""""" """""'' """"""" """"""" """""""
No comments:
Post a Comment