அன்பர்களே !
இவ்வாரத்து #இலக்கியத்_தேன்துளி என்னும் இத்தொடரில் தங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
11) நன்கு அறிந்துகொள் !
இறால் மீனின் பின் புறத்தைப் போன்ற சுரசுரப்பு மிகுந்த தன்மை உடையதுமாய்ச், சுறா மீனின் முகத்தில் தோன்றும் நீண்ட கொம்பினைப் போன்ற கூரான முட்களைக் கொண்டதுமாய் அந்தத் தாழம்பூ பூத்திருக்கிறது. அவ்வழகிய நெய்தல் நிலத்திற்கே சொந்தமான அந்தத் தாழம்பூ நல்லிதழ் மலர்த்து பூத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.






