....தொடர்ச்சி,..7
ஒருகையில் நான்மறைகள் வைத்துக் கொண்டும்,
ஒருகையில் குர்ரானை ஏந்திக் கொண்டும்,
ஒருகையில் துலாக்கோலை வைத்துக் கொண்டும்,
ஒருகையில் சிலுவையினை ஏந்திக் கொண்டும்
திருக்கடவுள் என்னெதிரே நின்றி ருந்தார்
திங்களொளி போல்மேனி திகழக் கண்டேன்.
அருளபயம் தருகின்ற காட்சி தந்தான்
ஆண்டவனே என்நண்பன் வடிவில் வந்தான்.!
"பலநூறாய் அருச்சனைகள் ஓமம் வேள்வி
பலவகையாய் விரதங்கள் வேண்டு தல்கள்
பலகோடிப் பொருட்செலவில் திருவி ழாக்கள்
பலபேரும் உனையெண்ணித் தவமி ருக்க
உலைகின்ற பந்தத்தில் உழன்ற வாறே
ஓரோர்நாள் வணங்குகின்ற என்றன் முன்னே
கலக்கத்தைத் தீர்க்கின்ற கதிர வன்போல்
கடவுளேநீ வந்ததென்ன? " என்று கேட்டேன்.!
"ஏழைகளின் கண்களுக்குத் தெரிய மாட்டேன் "
எனக்கடவுள் சொன்னவுடன் அதிர்ந்து போனேன்
ஏழைப்பணக் காரனெனப் பகுத்துக் கொண்ட
இம்மக்கள் போல்நீயும் இருக்க லாமா?
ஏழைக்கே நீகாட்சி தருதல் வேண்டும்
ஏன்.,நானும் ஏழைதான் " என்று சொன்னேன்.
"ஏழையெனச் சொன்னதைநான் மறுக்க வில்லை
ஏழையெனல் பணத்தாலே இல்லை தம்பீ....!
....,தொடரும்....
No comments:
Post a Comment