பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

28 Nov 2015

சோலைக் கவியரங்கம்



அன்பு கவிஞர்களே! பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர்களே! அனைவருக்கும் வணக்கம்..நம் பைந்தமிழ்ச் சோலையில்  "சோலைக் கவியரங்கம் " தொடங்கப்படுகிறது. விளக்கங்களை ஊன்றிப் படிக்கவும்.
கவியரங்கின் நடைமுறை
*****---**********************
★அறிவிப்பின்படி கவியரங்கில் கலந்து கொள்ள பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.
★பொதுவான தலைப்பு ஒன்றும், அதனுள் அடங்குகின்ற துணைத் தலைப்புகள் சிலவும் கொடுக்கப்படும்.
★துணைத் தலைப்புகளுள் விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுத வேண்டும்.
★அக்கவிதையைக் கொடுக்கப்படும் இறுதி நாளுக்குள், கொடுக்கப்படும் "மின்மடல் " முகவரிக்கு அல்லது கவியரங்கத் தலைவரின் செய்திப் பேழைக்கு (Messanger) அனுப்ப வேண்டும். மின்மடல் முகவரி பெரிதும் உதவியாக இருக்கும்.
★கவிஞர்கள் தங்கள் கவிதையுடன் தன்னைப் பற்றிய சிறுகுறிப்பும், புகைப்படமும் (விரும்பினால்) அனுப்ப வேண்டும்.
★கவியரங்கக் கவிதையை வேறு எங்கும் பதியவில்லை, என்ற உறுதிச் சான்றும் அளிக்க வேண்டும்.
★அனுப்பப்படும் கவிதைகளைக் கவியரங்கத் தலைவர் தன் வரவேற்புக் கவிதை, வாழ்த்துக் கவிதையுடன் இணைத்து, இறுதி நாளுக்கு மறுநாள் முதல் "பைந்தமிழ்ச் சோலையில் "(மட்டுமே) வெளியிடுவார்.
★தலைவர் வெளியிட்ட பிறகே அக்கவிதையைத் தங்கள் பக்கத்திலோ, மற்றவர்களிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டும். 
★★★
கவியரங்கில் கலந்து கொள்ள தகுதிகள்.
★பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
★மரபு கவிதைகள் மட்டுமே எழுத வேண்டும்.
★சோலையில் தொடர் பதிவுகளையிட்டும், கருத்துகளையிட்டும் தொடர்பில்        இருப்பவர்களுக்கு முன்னுரிமையும், மற்றவர்கள் அடுத்த நிலையிலும்                வைக்கப்படுவர்.
★★★
"இக்கவியரங்கம் பரிசுக்குரியதன்று. வெற்றி, தோல்விகள் இல்லாதது.
வெளியிடப்படும் கவிதைகளின் கருத்துப் பகுதியில் சுவைஞர்கள் கொடுக்கும் பாராட்டே நமக்கு நிறைவைத் தருவதாகும்.
நன்றி! 
தமிழன்புடன்,
பாவலர் மா. வரதராசன்
(குறிப்பு)
முதல் கவியரங்கின் விபரம் நாளை அறிவிக்கப்படும். இப்பதிவைத் தங்கள் பக்கத்தில் Save சேமித்து வைத்துக் கொள்ளவும்)
★★★

No comments: