பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

28 Nov 2015

"சோலைக் கவியரங்கம் " தலைப்புக்கள்



#‎அறிவிப்பு‬
"சோலைக் கவியரங்கம் "
சோலையின் மலர்களுக்கு வணக்கம். இதோ சோலைக் கவியரங்கம்.
பொதுத் தலைப்பு
"போற்றப்பட வேண்டியது..."
துணைத் தலைப்புகள்
அ. இயற்கை
ஆ. கடவுள்
இ. தாய்மை
ஈ. ஒழுக்கம்
விதிமுறைகள்.

★கலந்து கொள்ள விழைபவர் இப்பதிவிலேயே தன் கோரிக்கையைப் பதிய வேண்டும்.
★ஏதேனும் ஒரு துணைத் தலைப்பில் மட்டுமே கவிதையை அனுப்ப வேண்டும்.
★சான்றாகக் கடவுளைத் தேர்ந்தெடுத்தால் , 
போற்றப்பட வேண்டியது...
ஆ.கடவுள் 
என்று குறிப்பிட வேண்டும்.
★தமிழ் வாழ்த்துக்கு நான்கடிகளும், அவையடக்கம், தலைமைக்குச் சேர்த்து நான்கடிகளும் போக,
★கவிதைகள் வெண்பா வகையாயின் பத்து வெண்பாக்களும், (அளவடியாயின்)
★ஆசிரிய விருத்தமாயின் ஐந்து விருத்தங்களும்,
★மற்ற வகையாயின் 40 அடிகளுக்குள் (மிகாமல்)
★கண்டிப்பாக மரபு பாக்களை மட்டுமே அனுப்ப வேண்டும்.
★கவியரங்கிற்கு அனுப்பிய கவிதையை வேறு எங்கும் தனியாகப் பதிவிடக் கூடாது.
கவியரங்கத் தலைவர்
★பாவலர் மா.வரதராசன்★
(முதலாக நின்று
வழிகாட்ட வேண்டியிருப்பதால் இக்கவியரங்கிற்கு நானே தலைமை வகிக்கிறேன்.)
கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31/12/2015
அனுப்ப வேண்டிய மின்மடல் முகவரி
varadhanmari@gmail.com
(மின்னஞ்சல் இல்லாதோர் மரபு மாமணி பாவலர் மா வரதராசன் என்ற செய்திப் பேழையில் Mesanger. அனுப்பலாம்.
மற்ற விளக்கங்கள் முன்னரே அறிவித்தபடி கீழுள்ள இழையில் காணவும்.
https://m.facebook.com/groups/914195052001517?view=permalink&id=957412624346426

No comments: