பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Jan 2016

முயன்று பார்க்கலாம் 3 (முற்று முடுகு வெண்பா)


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
"முயன்று பார்க்கலாம் " : 3 இல் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இப்பயிற்சியில் நாம் காணப்போவது "முற்று முடுகு " வெண்பா ஆகும்.
முடுகியலைப் பற்றியும், சந்த இலக்கணத்தைப் பற்றியும் முயன்று பார்க்கலாம் - 2 இல் விளக்கப்பட்டிருந்ததை மீண்டும் நினைவில் கொண்டு, அந்த இலக்கணத்தின்படி இங்கே கொடுக்கப்பட்டுள்ள பாடலைச் சான்றாகக் கொண்டு உங்கள் பயிற்சிப் பாடலை, இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Comment) மட்டும் பதியவும்.
முன் கூறப்பட்ட இலக்கணத்தையும், விளக்கத்தையும் புதிய வரவான நம் சோலைக் கவிஞர்கள் அறியும் பொருட்டு அதன் இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன். அதைச் சொடுக்கிக் காணவும்.


முற்று முடுகு வெண்பா 
****************************
கொண்டுவந்த தென்னவென்று குன்றமர்ந்த வன்றெளிந்து
மண்டலம்பி றந்துநைந்து மங்குமுன்பு - நண்பிணைந்த
தங்கரங்கொ டும்புரிந்து தங்குமென்ற பண்புணர்ந்து
பொங்குமன்பு முண்ணிறைந்து பொன்று!
- பாவலர் மா.வரதராசன்

குறிப்பு : முன்பயிற்சியில் கண்ட முன்முடுகு வெண்பாவில் முடுகியல் முன்னிரண்டு அடிகளில் மட்டும் வரும்.(தனிச்சீர் வரை)
முற்றுமுடுகு வெண்பாவில், அனைத்துச் சீர்களும் முடுகியலாக நான்கடிகளிலும் வரும்.
தனிச்சீர் எதுகையும் வரவேண்டும். (நேரிசையாதலால்)
வெண்பாவின் மற்ற இலக்கணங்களும் பொருந்த வேண்டும்.
"முக்கிய குறிப்பு "
கையாளப்படும் சந்தத்தின் அரைச் சந்தமே ஈற்றுச் சீராக வரவேண்டும்.
சான்று பாடலில்,
தந்தனந்த என்ற சந்தத்தின் அரைச்சந்தமான, "தந்து " எனக் காசு வாய்ப்பாட்டில் முடிந்துள்ளதைக் காண்க.(தானதன என்று சந்தமாயின், தான (தானு) என வரவேண்டும்.
ஏதேனும் ஐயங்கள் ஏற்படின் கேளுங்கள்.
முய்ன்றால் முடியாதது எதுவுமில்லை. 
வாருங்கள். முயன்று பார்க்கலாம்.
முன் பயிற்சியின் இணைப்பிற்கான இழை..
.
முகநூலில் 
https://m.facebook.com/groups/914195052001517?view=permalink&id=961764630577892
வலைப்பூவில் 
http://painthamizhchsolai.blogspot.qa/2015/12/2.html

★★★

No comments: