#சோலைக்கவியரங்கம்
கவிஞரை அழைத்தல் : 19
(நேரிசை வெண்பா)
இந்தக் கவியரங்கின் ஈற்றுக் கவிஞரிவர்
தந்து மனமகிழச் செய்திடவே - வந்தே
அமிழாத் தமிழோ டரங்கம் வருக
தமிழ்தங்க ராச ரே!
#தமிழ்தங்கராஜ் அவர்களே வருக!
தண்டமிழ்த் தேனள்ளித் தருக!
★
போற்றப்பட வேண்டியது...
ஈ. ஒழுக்கம்
**************
கவிஞர் #தமிழ்தங்கராஜ்
சென்னை. சோலையில் மரபைப் பயிலும்
ஆர்வலர். பாட்டியற்றுக பயிற்சியில் பங்கேற்றவர்.
★
போற்றப்பட வேண்டியது,..
ஈ. ஒழுக்கம்
**************
(அறுசீர் விருத்தம்)
>> ஒழுக்கமன்றி சிறந்த நல்ல
>> ஒச்சமேது சொல்லு வீரே
>> அழுக்கின்றி மனிதம் வாழ
>> அறிவுதனை இயம்பு வீரே
>> மெழுகெனவே உருகி என்றும்
>> மிருதுவாக நல்கு வீரே
>> அழுகுரலை நிறுத்த வேண்டி
>> அச்சமதை நீக்கு வீரே
>>
>> ஒழுங்குதரும் ஒழுக்கம் கற்றே
>> ஒண்ணாமை தன்னை விட்டே
>> விழுந்திடா திருக்க எண்ணி
>> விருப்பமது இருத்தல் நன்றே
>> வாழும்வாழ் வுதனைச் சீராய்
>> வடிவமைத்து வாழ்ந்து காட்ட
>> ஒழுக்கமன்றிச் சிறந்த நல்ல
>> ஒச்சமேது சொல்லு வீரே
>>
>> பழுதில்லா மனம டைய
>> பட்டறிவாய் ஒழுகல் வேண்டும்
>> உழுதுவைத்த பூமி போலே
>> உருப்படியாய் மாறல் வேண்டும்
>> கழுமரம்போல் இருக்கும் நெஞ்சை
>> கருத்துடனே களைதல் வேண்டும்
>> ஒழுக்கமன்றிச் சிறந்த நல்ல
>> ஒச்சமேது சொல்லு வீரே
>>
>> தழுவிநின்று ஒழுக்கத் தாலே
>> தழைத்திடவே மனிதா நாளும்
>> வழுவாமல் நீதி காத்து
>> வாழ்ந்திடவே வேண்டும் வேண்டும்
>> மழுப்பாமல் எந்த நாளும்
>> மறையுடனே வாழ்தல் வேண்டும்
>> ஒழுக்கமன்றிச் சிறந்த நல்ல
>> ஒச்சமேது சொல்லு வீரே
>>
>> செழுமைநல் கீர்த்தி பெற்றே
>> செழுமையாய் நலமாய் வாழ
>> வழுவாநல் உயர்வு கொண்ட
>> வளமுடைய வழியை கண்டே
>> வாழிவாழி தமிழா இன்ப
>> வரவாக ஒழுக்கம் கொண்டே
>> ஒழுக்கமன்றிச் சிறந்த நல்ல
>> ஒச்சமேது சொல்லு வீரே
★
தமிழ்.தங்கராஜ்
24/01/2016
★★★
No comments:
Post a Comment