பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 9



#‎சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 9
(ஒயிற்கும்மி)
கன்னித் தமிழவள் காதல னாமிந்தக்
கல்லூரி மாணவன் காணுமய்யா
கட்டித்தமிழ் கொட்டிப்பல
கற்றுக்கவி மெச்சத்தகு
கன்னற் கவிஞனை வாழ்த்துவமே!

போற்றப்பட வேண்டியது...
இ.தாய்மை
*************
கவிஞர் ‪#‎நிறோஸ்அரவிந்த்‬ 
Nirosh G Aravind

இயற்பெயர் நிறோஸ் ஞானச்செல்வன் 
இலங்கை.
கல்லூரி மாணவர்.
இளங்கலை (விவசாயம்) இரண்டாமாண்டு படித்தாலும், தாய்மொழியாம் தமிழின் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக இலக்கணத்தையும், இலக்கியங்களையும் கற்று, பல்வேறு யாப்புகளில் மரபு விதை எழுதும் ஆற்றல் பெற்றவர்.
அரவிந்தரை ஆன்மிகக் குருவாகக் கொண்டு, தன் பெயரை "நிரோஸ் அரவிந்த் " என மாற்றிக் கொண்டவர்.
பைந்மிழ்ச் சோலையின் பாட்டியற்றுக பயிற்சிகளில் தொடர்ந்து பங்கேற்றவர்.
******** *******- *********
தமிழ்வாழ்த்து
(நேரிசை வெண்பா)
முதுசிவன் தந்தநல் முத்தமிழ் தானும் 
புதுமைகள் செய்து புவியிற் - பொதுமையு 
மாகிப் புகழது வானு றவுங்கவியு 
மாகிடுமென் நெஞ்சத்து வாழ்த்து!

அவையடக்கம்
(பஃறொடை வெண்பா)
ஆன்றோர் நிறையும் அழகுமிகு சங்கத்தில் 
சான்றோரும் நற்பா சமைக்கின்ற பான்மை 
பெறுதமிழ்ச் சோலை பெறுவரத ராச! 
நறுந்தமிழ்ப் பாவலரை நானும் பணிந்திடத் 
தாய்மையது போற்றிடுந் தண்மைக் கவியொடு
வாய்மையுஞ் சேர்ந்து வரும்!

தாய்மை
(கலிவெண்பா)
தான்வ ரவியலாதாம்; தாய்மை படைத்தது
மேன்மை இறையுமிம் மேதினி தன்னிலே 
பெண்ணவள் பெற்றாள் பெறற்கருந் தாய்மையும் 
கண்ணது போலவளைக் காத்தல் கடனாம் 
குழந்தை தனையுயிராய்க் கொள்ளுநற் றாய்தன் 
கழலையும் போற்றக் கடவுள் மகிழ்வரே 
ஆணவனும் தாய்மை அடைவதும் உண்மையது 
காணமறுத் திட்ட கசப்பான மெய்தானே
தன்னையும் சார்ந்தவள் தன்னை உயிர்தனில் 
என்றும் சுமக்க இயல்புறும் தாய்மையே 
ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் ஆனதொரு தாய்மையதைப் 
பாடலாற் போற்றுதல் பண்பென நானும் 
முனைந்து வடித்தநல் முத்தமிழ்ப் பாவில் 
நனையுமே தாய்மை நலம்!

கவிஞர் நிறோஸ் அரவிந்த்
இலங்கை
நாள் :19/01/2016
★★★★★

No comments: