பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

13 Nov 2016

வண்ணம்

 

                                 

                                  வரதராசன் பாக்கள் 


                                                        வண்ணம்

சந்தக்குழிப்பு.:

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன...தனதானா

---- ---- ---- 

இற்றைக்குள நச்சுக் கவிஞரை
          மெச்சப்பெறு வெற்றிக் கவியென
          இட்டுச்செலு மக்கட் புலவரு - மிவர்தானே
     எச்சிற்படு மெச்சத் துகளினை
          நத்திப்பெறு மற்பப் பதரென
          இச்சைக்கொடு மற்றைக் குளமொழி  - நினைவோரை

வெற்றிக்கொடி நட்டுப் பழியற
         எத்திக்கிலு மெத்தப் புகழுற 
         வெட்டிக்கிளை யற்றுப் புவிவிழ - முனைவாரே
     வெற்றித்திரு மெத்தத் தமிழனை
         எச்சிற்பெறு வெட்டிப் பயலென
         விற்கப்புகு மெச்சிற் றமிழனை - இகழ்வோரை

நெற்றிச்சுழி முற்றிக் கணைவிட
      மெச்சப்படு வெற்றிக் கிவரெதி.(ர்.)
      நிற்றற்கென வொற்றைக் கவிஞரு  - முளராமோ.?
  நெட்டிப்பகை முட்டிச் சமரென
     முற்பட்டெழு முத்துக் கவிகளை
      நிற்கத்தகு மிச்சைக் கவிஞரை - நினைவாரே

எற்றைக்கிவர் பட்டுக் கவிகளை
      மக்கட்குல மொத்தக் கவியென
      இற்றைத்தல மைக்குப் புரிபட - முனைவோமே
  எச்சிற்பழ(ம்) நத்திக் களியுறு
     மொத்தத்தமி(ழ்) மக்கட் கிவருடை
     எச்சப்படு மொத்தக் கவிகளு - முயிலாமே.!
                                                                     ★★★★★
இப்பாடல்  என்  ஆசான் மு.வே.கங்காதரன் அவர்களைப்  பாடு பொருளாக்கி எழுதப்பட்டது .

No comments: