பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Oct 2015

பாட்டியற்றுக - 10நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 10" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***

30 Oct 2015

பாட்டியற்றுக 10 இன் தொகுப்பு
அன்பு நண்பர்களே கவிஞர்களே வணக்கம் !

பாட்டியற்றுக தொகுப்பு 10
அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!! 


28 Oct 2015

முயன்று பார்க்கலாம் - 1

முயன்று பார்க்கலாம் - 1
நண்பர்களே.! இதோ முதல் பயிற்சி.

பாடல்களை நன்கு ஆழ்ந்து படித்துப் பின் எழும் ஐயங்களைக் கருத்துப் பகுதியில் கேளுங்கள். (பாடலைப் பற்றி உங்கள் உணர்வையும் பகிரலாம்.)

24 Oct 2015

சிலேடை வெண்பா - இரட்டுறமொழிதல்


நண்பரும், கவிஞருமான திரு.Venkatesan Srinivasagopalan அவர்களின் ஓயாத மடக்கு, சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த என் உள்ளத்தெழுந்த ஓர்
"‪#‎இரட்டுறமொழிதல்‬ 
இப்பாடலை அன்னாரின் தமிழ்ப்பணிக்குப் படையலாக்குகிறேன்.
வெங்கடேசனுக்கும்.- மீனுக்கும்
(இன்னிசை வெண்பா)
*******-**********-*****
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத் 
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு.!

வெங்கடேசன்.:
1. உண்ணுதல் மறந்து பாவடிப்பார்
2. அவருடைய பாக்கள்.(தோலெனின் 
பாட்டு.) மிளிரும்.
3. கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார்.
4. மடக்குப் பா, இரட்டுற மொழிதல் 
எழுதுவார்.
5. தமிழ்க் கடலில் (அவருள்ளம்.) நீந்தும்.
மீனுக்கு.:
1. உணவில் உண்ணுமாறு அடங்கும்.
2. மேல்தோலாகிய செதிள் மிளிரும்.
3. கண்கள் மூடாது. (எப்போதும்.)
4. மடங்கி,வளைந்து நீந்தும். 
துணையுடன் இணைந்து 
இரண்டாகக் காட்சித்தரும்.
5. குளிச்சியான கடலில் வாழும்.
(மற்றவர்களும் என்னை ஈர்த்தவர்களே. அனைருக்கும் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்.)
தமிழன்புன்,
பாவலர் மா. வரதராசன்

23 Oct 2015

பாட்டியற்றுக : 9 இன் தொகுப்பு.அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 9 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக:9

20 Oct 2015

பாட்டியற்றுக - 9


நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 9" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
ஆசிரிய விருத்தம் (வேறு)
விளைநிலத்தை அயலானுக் 
களித்துவிட்டால் அதன்பின்னர்
விளைச்ச லின்றி
இளைத்துவிழும் நிலைதோன்றும்
அயலானைக் கையேந்தும்
இழிவே மிஞ்சும்.
உளைந்திடுமென் உள்ளத்தோ.(டு.)
இவ்விழிவை உரைத்திட்டேன்
உங்கள் முன்னே
விளைந்திடுமோர் நலன்வேண்டி...
பிழையென்றால் உரைப்பீரே
மேன்மை யோரே.!
--பாவலர் மா.வரதராசன்

19 Oct 2015

3) பழமோ வண்டோ ?


அன்புடைப் பாவலர்க்கு வணக்கம் !
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன். இதோ இவ்வாரத் துளி
3) பழமோ வண்டோ ?

யாப்பறிவோம் 6 செய்யுளியல்


செய்யுளியல் !
இனிச் செய்யுளியலை நோக்குவோம். மேற்சொன்ன செய்யுள் உறுப்புகள் ஆறையும் பயன்படுத்தி இயற்றப்படுவதே மரபுச் செய்யுள் ஆகும்.
மரபுப்பாக்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே முறையாக யாக்கப்பட்டன என்பதற்குத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரச் செய்யுளியலே சான்றாகும்.
யாப்பதிகாரம் என்றபெயர் பெறுமளவுக்கு மிகுதியான நூற்பாக்கள் செய்யுளியலில் இடம் பெற்றிருந்தாலும் இப்போதைய நிலையில் சிலநூற்பாக்கள் கூறும் இலக்கண விதிகள் வழக்கிழந்து போயின.
நான்கு வகை அசைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
நேரசை,
நிரையசை,
நேர்பசை,
நிரைபசை 

2, தலைவனுந் தூதனும்


அன்பர்களே ....
தங்களை இந்த இரண்டாவது ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் சந்திப்பதில் பேரார்வம் கொள்கிறேன்
.
2) தலைவனுந் தூதனும்

16 Oct 2015

பாட்டியற்றுக 8 இன் தொகுப்பு.அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 8 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 8

12 Oct 2015

பாட்டியற்றுக - 8


நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 8" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
ஆசிரிய விருத்தம் (வேறு)

தாயவள் தானே தெய்வமென் றெண்ணித் 
தயக்கமி லாதுரைப்பேன்
சேயடிப் போற்றிச் சிந்தையில் நிறைத்துச்
சேதிகள் கூறிடுவேன்
வேய்ங்குழ லோசை மேன்மையைப் போலே
வேண்டிய வாறெல்லாம்
வாய்த்திடு மிங்கே தாயினைப் பணிந்தால்
வடிவினைப் பணிந்தேனே.!

பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
ஆசிரியப் பாவின் இனமாகிய விருத்தம் இக்காலத்திற்கு மட்டுமன்றி நம் இலக்கிய வரலாற்றின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டவோர் பாவினமாகும். இன்று பல மரபு கவிஞர்களாலும் இயற்றப்பெறும் பாவினமான "ஆசிரிய விருத்தம்." அறுசீர்கள் தொடங்கிப் பல சீர்கள் வரையிலான அமைப்பில் முற்காலத்தில் பாடப்பெற்றன.தற்கால வழக்கில் மிகச் சிலவே நடைமுறையில் உள்ளன.நம் சோலையின் இப்பகுதியின் வாயிலாக நாம் பல்வேறு விருத்த வகைகளைக் கையாண்டு மரபைக் காப்போம்.
மேற்கண்ட பாடல் "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." (விளம்,மா,விளம்,மா,விளம்,காய்)ஆகும்.
பொது இலக்கணம்.
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " விளம், மா, விளம்,மா,விளம்,காய்." என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிந்தும்
வருவது "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவிளம், கருவிளம் இரண்டில் எதுவும் வரலாம்
மாச்சீர் எனில்தேமா, புளிமா எதுவும் வரலாம். காய்ச்சீர் எனில் எந்தக் காயும் வரலாம்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

9 Oct 2015

பாட்டியற்றுக : 7 இன் தொகுப்பு.அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 7 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 7
*ஆசிரிய விருத்தம்*

5 Oct 2015

பாட்டியற்றுக - 7


வணக்கம்  நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 7" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
ஆசிரிய விருத்தம்

வாழ்க்கையே போராட் டந்தான்
வருமிடர் நீரோட் டந்தான்
தாழ்வையே நினைந்து நைந்து
தளர்ந்துபோய் துவண்டி டாமல்
வாழ்ந்திட நினைத்தால் போதும்
வானமும் கையில் சேரும்
வாழ்ந்திட வேண்டும் இந்த
வையகம் வாழ்த்து மாறே.!

பாவலர் மா.வரதராசன்

4 Oct 2015

1, இலக்கியத்தேன் துளிகள்இலக்கியத்தேன் துளிகள் என்னும்
         இன்பமிகு தொடராம் இஃதை
உலகினுக்குப் படைகின் றேனே
         உதவிடுவாய் சக்தி தேவி
தலைவணக்கம் உனக்குச் சொன்னேன் 
         தமிழ்வணக்கம் உனக்குச் சொன்னேன்
நிலைபெருவாய் என்றன் நாவில்
         நீக்கிடுவாய் பிழையை நீயே !!!!

பாட்டியற்றுக : 6 இன் தொகுப்பு.
அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 6 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 6

3 Oct 2015

பாட்டியற்றுக 6
நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 6" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக : 6

யாப்பறிவோம் -4


சீர்

இனிச் “ சீர் “ என்றால் என்னவென்று பார்ப்போம்.

1.சீர் என்பதன் பொதுவான இலக்கணம் யாது? 
நேரசை நிரையசை ஆகிய இரண்டு அசைகளும் தனித்தோ அல்லது இரண்டு முதலானவை இணைந்தோ அழகுபட நயம்பட இசைத்துச் சீராகி நிற்பது சீராகும்.
செய்யுளுக்கு இசைநயத்தைத் தருவதும் செய்யுள் ஓசையை ஒழுங்கு படுத்துவதும் சீர் ஆகும்.

யாப்பறிவோம் -5 தளை ,அடி


தளை

1. தளை என்ன என்பதைக் கூறி அதன்வகைளை விளக்கிக் கூறுக?

ஒரு பாவின் ஓர் அடியில் நின்ற சீரின் ஈற்றøசையோடு வரும்சீரின் முதற்சீரைத் தளைத்து அல்லது இணைத்து பந்தமுற நிற்பது தளையாகும்.
அதாவது தளைத்து நிற்பது. சீரோடு சீரை இணைத்துச் செய்யுள் அடிகளை அமைக்கும் போது அவற்றுக்கிடையே ஏற்படும் இயைபே தளையாகும்.
பந்தம் என்பது தளையின் இன்னொரு பெயராகும்.

மரபைப் போற்று. 3(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
....நிறைவு...

உலகத்தில் எங்கேனும் தாய்மொ ழிக்கென்(று)
          ஒருதீங்கு நேர்ந்ததென வரலா றுண்டா.?
கலகங்கள் செய்கின்றார் கயவர் கூடித்
          கனித்தமிழை ஒழித்துவிடத் துடிக்கின் றார்கள்
'மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
          மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்.
உலையிட்டுத் தமிழ்ப்பொன்னை உருக்கி னாலும்
          உருமாறிப் புதிதாக உருவா குங்காண்.!

பாட்டியற்றுக : 5 இன் தொகுப்பு.அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!

 முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.!

பாட்டியற்றுக: 5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

நன்றி.!
***** 

பாட்டியற்றுக: 5

யாப்பறிவோம் -3


அசை

1.தனிக்குறில்! 2.ஒற்றும் 3.தனிநெடில்! 4ஒற்றும்
இனியநல் நேரசை என்பார் 1இணைக்குறில்!
2ஒற்றும்! 3.குறில்நெடில் 4.கூடவே ஒற்றுமே!
நிற்றல் நிரையசையின் நேர்பு

 ( நேர்பு -- மாண்பு.) இது என்பாடல்)

சென்றதொடரில் எழுத்துகளைப்பற்றிப் பற்றி ஓரளவில் தெரிந்துகொண்டோம்.