பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

28 Nov 2015

"சோலைக் கவியரங்கம் " தலைப்புக்கள்#‎அறிவிப்பு‬
"சோலைக் கவியரங்கம் "
சோலையின் மலர்களுக்கு வணக்கம். இதோ சோலைக் கவியரங்கம்.
பொதுத் தலைப்பு
"போற்றப்பட வேண்டியது..."
துணைத் தலைப்புகள்
அ. இயற்கை
ஆ. கடவுள்
இ. தாய்மை
ஈ. ஒழுக்கம்
விதிமுறைகள்.

பாட்டியற்றுக : 14 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! 14 வகை (அதற்கு மேலும்) யாப்பு வடிவங்களை இப்பகுதியில் நாம் அறிந்துள்ளோம். பலரும் இவற்றில் முழுமை பெற்றுள்ளனர் என்பதில் பெற்ற தாயின் பேருவகை கொள்கிறேன். (ஈன்ற பொழுதின்..?.) இன்னும் நிறைய உள்ளன. கற்போம், மகிழ்வாக.
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும். மிக எளிமையான யாப்பு வகையிது.
எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எவ்வளவு விவாதங்கள்! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!! தொகுப்பைப் படித்துப் பாருங்கள் " யாம் பெற்றுள்ள இன்பத்தை நீங்களும் பெறுவீர்.இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -14

சோலைக் கவியரங்கம்அன்பு கவிஞர்களே! பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர்களே! அனைவருக்கும் வணக்கம்..நம் பைந்தமிழ்ச் சோலையில்  "சோலைக் கவியரங்கம் " தொடங்கப்படுகிறது. விளக்கங்களை ஊன்றிப் படிக்கவும்.

பாட்டியற்றுக - 14


நண்பர்களே.! கவிஞர்களே.! 

அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 14" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 14
கலித்தாழிசை
********-*-*****
ஒருவழியுங் காணாமல் ஊமையராய் வாழும்
தெருவோர ஏழைகளின் சிக்கலினை ஆய்ந்தே
உருப்படியாய் வாழ உதவுகின்ற பாட்டே
உயர்தமிழ்ப்பா வேந்தர் உரைத்திட்ட பாட்டே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***

25 Nov 2015

பாட்டியற்றுக : 13 இன் தொகுப்புஅன்பு நண்பர்களே! 
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!! இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -13
காப்பியக் கலித்துறை

1. கவிஞர் வள்ளிமுத்து
வாளை யுருவிக் களமேபுக வாழ்த்து வாளே
தோளை நிமிர்த்தி யெறிவேல்பட மார்பை யேந்திக்
காளை யிறக்கக் கலங்காதவன் பீடு பேசித்
தாளை வணங்கித் தமிழ்பேசிடும் மூதின் முல்லை

7) மதுநோக்கும் பொதுநோக்கும்


வணக்கம்
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத் தேன்றுளி.

8) மதுநோக்கும் பொதுநோக்கும்.

16 Nov 2015

6) தேவர் துயரறுத்தான் !


அன்புப் பாவலர்காள் !
வணக்கம் ! இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் தங்கிச் சந்திக்க வந்துவிட்டேன். இதோ இவ்வாரத்து துளி
6) தேவர் துயரறுத்தான் !

பாட்டியற்றுக - 13


நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 13" இதோ.!முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 13

எங்கும் தண்ணீர்! (அறுசீர் விருத்தம்)


தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கண்டு எழுதியது.
எங்கும் தண்ணீர்! (அறுசீர் விருத்தம்)
சாலையில் எங்கும் தண்ணீர் 
       சந்துகள் முழுதும் தண்ணீர்
ஆலயத் துள்ளும் தண்ணீர்
      ஆண்டவன் மேலும் தண்ணீர்
ஓலையில் கூடத் தண்ணீர்
      ஓடையில் ஓடும் தண்ணீர்
ஆலையின் உள்ளும் தண்ணீர்
      ஆறெனத் தண்ணீர் தண்ணீர்!

5) வேனிலின் கார்காலம்


வளந்தமிழ்ப் பாவலர்க்கு என் வணக்கம்..!
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பத்தில் மகிழ்வை அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
5) வேனிலின் கார்காலம்

பாட்டியற்றுக : 12 இன் தொகுப்புஅன்பு நண்பர்களே!
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எவ்வளவு விவாதங்கள்! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!!
தொகுப்பைப் படிக்காதீர்கள்... "பாடிப் பாருங்கள் " யாம் பெற்றுள்ள இன்பத்தை நீங்களும் பெறுவீர்.

இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -12
கட்டளைக் கலித்துறை

4) மண்ணில் விண்ணில்


அன்புள்ள பைந்தமிழ்ச் சோலைப் பாவலர்களே...!
இந்த வாரத்தின் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அடைகிறேன். இதோ இவ்வாரத் துளி

12 Nov 2015

பாட்டியற்றுக - 12நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 12" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
பாட்டியற்றுக - 12

பாட்டியற்றுக 11இன் தொகுப்புஅன்பு நண்பர்களே! கவிஞர்களே! வணக்கம்.!
பாட்டியற்றுக 11 இன் தொகுப்பு, அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!!

பாட்டியற்றுக தொகுப்பு -11
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

7 Nov 2015

முயன்று பார்க்கலாம்.: 1 இன் தொகுப்புஅன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
மிகவும் கடினமான இதழகல் வெண்பா முயற்சியில் பல கவிஞர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். சிலர் மிகவும் முயன்றும் இயலவில்லை, என்றாலும் நாளடைவில் செம்மையான பயிற்சியின் மூலம் வெற்றிடைவர். முயற்சி திருவினையாக்குமன்றோ? பங்கேற்ற அனைவருக்கும் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வழக்கம் போலவே, இதில் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் கவிஞர்கள் அனுப்பிய வரிசைமுறைக்கேற்பவே கொடுக்கப்பட்டது. தரவாரியாகக் கொடுக்கப்பட்டதன்று. படித்துப் பார்த்து வாழ்த்துங்கள். அது அனைவருக்கும் ஊக்கமாக அமையும்.

தமிழன்புடன் பாவலர் மாவரதராசன் 
*** முயன்று பார்க்கலாம் - 1  இதழகல் பாக்கள். ****

2 Nov 2015

கதம்பச் சிந்துகதம்பச் சிந்து 

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல்.
கணவனின் விடைகள் "காவடிச் சிந்து வகையாகவும்,
மனைவியின் வினாக்கள் பலவகைச் சிந்துப் பாடல்களாகவும் உள்ள "கதம்பச் சிந்து

பாட்டியற்றுக 11


பாட்டியற்றுக - 11 

நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும்  பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 11" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
        *** *** *** *** 
பாட்டியற்றுக - 11