பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Nov 2015

எங்கும் தண்ணீர்! (அறுசீர் விருத்தம்)


தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கண்டு எழுதியது.
எங்கும் தண்ணீர்! (அறுசீர் விருத்தம்)
சாலையில் எங்கும் தண்ணீர் 
       சந்துகள் முழுதும் தண்ணீர்
ஆலயத் துள்ளும் தண்ணீர்
      ஆண்டவன் மேலும் தண்ணீர்
ஓலையில் கூடத் தண்ணீர்
      ஓடையில் ஓடும் தண்ணீர்
ஆலையின் உள்ளும் தண்ணீர்
      ஆறெனத் தண்ணீர் தண்ணீர்!


தரையினில் அமர்ந்தால் ஓதம்
       சட்டையைத் தொட்டால் ஓதம்
சுரையிலும் ஓதம் வீட்டுச்
      சுவரினைத் தொட்டால் ஓதம் 
கரையுள மரத்தில் ஓதம்
      கல்லிலும் காணும் ஓதம்
உரைத்திட வியலா வண்ணம்
      ஊரெலாம் ஓதம் தானே!

அடுப்பினில் தங்கும் ஈரம்
         அம்மியில் கூட ஈரம்
படுக்கையில் ஈரம் தண்ணீர்
        பானையில் ஈரம் பெண்ணின்
இடுப்பினைத் தொட்டால் ஈரம்
       என்வீட்டு நாய்மேல் ஈரம்
கடுப்பினைக் கொடுத்த திந்தக்
       கடுமழை பொழிவி னாலே!!!
★★★

No comments: