பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

2 Dec 2016

வரதராசன் பாக்கள்

                               வரதராசன் பாக்கள் 

                                                              வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன. 
- தனதானா

எடுத்த யாவையு மேநிறை வேறிட
     எற்றைக் குளமொழி செந்தமி ழொன்றியென்
    இணைவுற வருதுணை இனியெவர் பெறுபவ.             - ரறியேனே.
         எலிக்கு
ழாமரு போரிடு மோசிலர்
         வெற்றித் தளமிதை வென்றிட வஞ்சியு
         மிழிவொடு மறுதள மமைவதி லொருவெறி           - அடைவாரே
கெடுத்த லேயவர் சீழ்மன மாகிட
    இற்றைக் கிவர்புரி யுஞ்செயல் நஞ்சொடு
    கெடுதலை நினைகுவ ரிவர்நிலை யவர்மன.              -முணராதோ?
       கிடைக்கு மோவிவர் மேனிலை யோவென
       எச்சிற் கவிகொடு தங்கவி தந்தெதிர்
       கெடுவுணர் வுடையவர் கவியென அலைகுவ.       - ரறிவேனே.
தடுத்த லேயிலை தீநினை வோர்களின்
     வெற்றுச் செயலினை வென்றிடு மென்பணி
     தகுவழி யிதுவென அறிகில ரவர்நிலை                      - நிலையாதே
           தகிக்கு மோர்வெயி லோனவ னீளலில்
          நிற்றற் கெவருளர் எஞ்சலு மிஞ்சலு
         தவிடென அலைவுறு மதனிலை அழிவுறு            - மொருநாளில்
நடுக்கி யோடுவர் நாடுவ ரோவினி
    நச்சுக் கவிகளு மொண்டுத லிங்கிலை
    நறுமொழி தமிழதன் நனிநிலை யறிகுவர்                 - விரைவாக
       நடிப்பொ டேயெவர் நாடினும் வீழுவர் 
      பட்டுத் தமிழ்மகள் வெஞ்சின மிஞ்சிட
       நகுபவ ரனைவரும் தொகுதொகு தொகுவென . - அழிவாரே!
★★★

No comments: