பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

2 Dec 2016

வரதராசன்பாக்கள்

#வரதராசன்பாக்கள்

          "உழைப்போர் உயர்க"

உழைத்துக் களைத்த கூட்டம் வாழ்வில்
   உயர்வைத் தேடப் பார்க்கிறது ...அவன்
உழைப்பால்
வாழும் முதலா ளித்துவம்
   உதிரம் குடித்தே தீர்க்கிறது.!

உழைப்பை மட்டும் பூமியில் விதைத்தால்
   உலகம் உன்னைப் பின்தொடரும்._ உன்
அழைப்பை ஏற்று அண்ட சராசரம்
   அணைத்துக் கொண்டு கண்வளரும்

துரும்பைக் கூடத் தூணாய் மாற்றும்
   துணிவால் உனக்குக் காலம்வரும்._ அதை
விரும்பும் உனக்கு உழைப்பால் தோன்றும்
   வியர்வை தானே மூலதனம்.?

கட்டுக் கடங்காக் காட்டா றும்உன்
   கைகள் பட்டால் கரையொடுங்கும்._ நீ
தட்டுக் கெட்டுத் திரிந்தா யானால்
   தரித்திரம் தானே உனைவிழுங்கும்.!

பாமரர் வாழ்வு வளமாய் நலமாய்ப்
   பட்டொளி வீசிப் பறக்கட்டும்._ அவன்
ஏமா றாமல் வாழும் வாழ்வில்
   ஏற்றம் பெற்றே சிறக்கட்டும்.!

                        பாவலர் மா.வரதராசன்

No comments: