பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

17 Sep 2015

மரபைப் போற்று 1

கல்தோன்றி மண்தோன்றா முன்பே தோன்றிக்
         காட்டாக வாழ்ந்தயினம் தமிழ ரென்று
சொல்கின்ற கூற்றினிலே துலங்கும் மேன்மை
         சோம்பேறித் தமிழனுக்குப் புரியா மல்தான்
கொல்கின்றான் தாய்மொழியாம் தமிழை மெல்ல
         குறைபட்டுக் கொள்கின்றான்...வளர்ச்சிக் கென்று
பல்துறையில் தமிழினிலே சொற்கள் இல்லை
         படிப்பிற்கும் ஏற்றமொழி இல்லை யென்று

.
தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை யில்லை
         தமிழனுக்கோ எங்கேயும் மதிப்பே யில்லை
அமிழ்கின்றார் அயல்மொழியின் மோகத் தீயில்
         அழிகின்றார் தமிழர்கள்...அடடா இந்த
அமிழ்தான மொழிதானே உலகில் முன்னர்
         அனைவர்க்கும் தாய்மொழியாய் இருந்த சேதி
தமிழர்கள் தம்பிள்ளை அறியாப் போக்கால்
         தமிழோடு தமிழர்கள் ஆட்டம் கண்டார்.!

இதுமிக நீண்ட கவிதை

என்பதால் சிறிது சிறிதாக .....

(தொடரும்...)


*பாவலர் மா.வரதராசன்*

No comments: