பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

யாப்பறிவோம்
முன்னுரை
தொல்காப்பியம்
தமிழ்மொழியில் நமக்குக் கிடைத்த முதல்நுõலும் முழுமையான நுõலும் தொல்காப்பியம் ஆகும்.ஒருமொழிக்கு இலக்கணம் எழுத விரும்பும் ஓர் ஆசிரியர் பொதுவாக அம்மொழியின் எழுத்துகளுக்கும்(Phonology) அவ்வெழுத்துகளால் உருவாகும் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும்தாம்(Morphology) இலக்கணம் படைப்பார்.
தமிழ் மொழியின் முதல்நுõலான தொல்காப்பியம் தமிழன் பேசிய தமிழ்மொழிக்கு மட்டும் இலக்கணம் படைத்ததோடு நில்லாமல் அவனது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையை உடையது.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் தமிழனின் வாழ்வியல் பற்றி இலக்கியச் சுவைபடப்பேசுகிறது.அதனால்தான் நமது முதல் பாட்டனாராகிய தொல்காப்பியரை நாம் போற்றி மதித்து வணங்குகிறோம்.
இதனால்தான் என்னுடைய பேராசிரியர் மூதறிஞர் வ.சுப மாணிக்கனாரும் “தொல்காப்பியம் ஓர் இலக்கண இலக்கிய நுõல்“ என்பார்.
தமிழ்மொழியில் தோன்றிய அனைத்து இலக்கிய இலக்கணநுõல்களுக்கும் அவற்றின் வகைமைகளுக்கும் அடிப்படையான நுõல் தொல்காப்பியமே.
(தொல்காப்பியத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகவும் தொல்காப்பியர்மேல் எனக்கு ஏற்பட்ட மரியாதை காரணமாகவும் என்முதல் மகனுக்குத் “ தொல்காப்பியன்“
எனப்பெயர் சூட்டினேன்.)

தொல்காப்பியத்தின் முப்பெரும்பிரிவுகள்
தொல்காப்பியம் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது.

1.எழுத்ததிகாரம்( Phonology)
2.சொல்லதிகாரம்((Morphology)
3.பொருளதிகாரம்(Matters)


ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது
1.எழுத்ததிகாரம்
1.நுõன் மரபு
2.மொழிமரபு
3.பிறப்பியல்
4.புணரியல்
5.தொகைமரபு
6.உருபியல்
7.உயிர் மயங்கியல்
8.புள்ளிமயங்கியல்
9.குற்றியலுகரப்புணரியல்

2.சொல்லதிகாரம்
1.கிளவியாக்கம்
2.வேற்றுமை இயல்
3.வேற்றுமைமயங்கியல்
4.விளிமரபு
5.பெயரியல்
6.வினையியல்
7.இடையியல்
8.உரியியல்
9.எச்சவியல்

3.பொருளதிகாரம்
1.அகத்திணை இயல்
2.புறத்திணைஇயல்
3.களவியல்
4.கற்பியல்
5.பொருளியல்
6.மெய்ப்பாட்டியல்
7.உவமஇயல்
8.செய்யுளியல்
9.மரபியல்

தமிழில் தோன்றிய எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்திலக்கணங்களுக்குத் தொல்காப்பியமே அடிப்படையை வகுத்துத் தந்தது.
தொல்காப்பியம்--- பொருளதிகாரம்--- செய்யுளியல்
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் எட்டாவது இயலாகிய செய்யுளியல்தான் பின்னால் எழுதப்பட்ட அனைத்து யாப்பியல் நுõல்களுக்கும் அடிப்படையாக அமைந்தது.
ஆனால் இங்கு நாம் பார்க்கப் போக்கும் யாப்பியல் சிந்தனைகளுக்கு உறுதுணையாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையானது
தொல்காப்பியத்தை ஒட்டி எழுதப் பட வில்லை என்பதும் தொல்காப்பியரின் ஒருசாலை மாணக்கரான(classmate) காக்கை பாடினியார் எழுதிய “ காக்கைபாடினியம் “ என்ற நுõலை ஒட்டி எழுதப் பட்டதாகும்
என்பதும் தமிழறிஞரின் துணிபு. ஆனால் நாம் இப்போது தொல்காப்பியரின் செய்யுளியலை அறிமுக அளவில் பார்த்துவிட்டு மேற்கொண்டு தொடரலாம்.

அருள்கூர்ந்து பின்னுõட்டத்தை இட்டுத் தவறுகள் நேர்ந்திருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்

முனைவர் .பத்மநாபன் பட்டாபு

No comments: