பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

பாட்டியற்றுக 1பைந்தமிழ்ச் சோலை நண்பர்களே.!

வணக்கம். நம் சோலையின் பணிகளுள் ஒன்றாக, மரபில் பாடல் இயற்றும் பயிற்சி இன்று தொடங்குகிறது. அனைவரும் பங்கு பெறலாம். இப்பதிவின் கமாண்ட் பகுதியிலேயே உங்கள் பாடலை எழுதுங்கள். அவரவர் பாடலுக்கும் கருத்துரைகளும், பின்னூட்டங்களும் இடப்படும். தவறாக எழுதியிருந்தால் மறுபடியும் எழுதலாம். பிழைகளைச் சுட்டினால் சினம் வேண்டா. பாடலைச் செம்மைப்படுத்தவே பிழையைச் சுட்டுவோம்.

ஒவ்வொரு பாட்டியற்றுக பதிவுக்கும் அப்பாடலின் பொது இலக்கணம் "கருத்தூன்றுக." பகுதியில் தரப்படும். அதை நன்கு படித்துப் பின் பாட்டியற்றவும். நன்றி.!

"வெண் செந்துறை."
*********-***************
நாளும் தமிழை நண்ணியே வாழும் 
தாளைப் பணிந்தால் தகுவுயர் வுறுமே.!
★★★
கருத்தூன்றுக.!
இரண்டு அடிகளால், ஈரடியும் ஓரெதுகை பெற்று, ஒன்றாம் மூன்றாம் சீர்களில் (பொழிப்பு மோனை.) மோனை பெற்று, இயற்சீர்களால், ஈற்றடி ஏகாரத்தில் முடிவது *வெண் செந்துறை* ஆகும்.
நீங்கள் விரும்பிய பொருளில், எட்டடிகளுக்கு மிகாமல் பாட்டியற்றுங்கள் நண்பர்களே.!
*பாவலர் மா.வரதராசன்*

No comments: