பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

17 Sep 2015

யமக வெண்பா: (மடக்கு)இடுவா யரிதார மென்னண்ப வாழ்வில்
இடுவா யரிதார மென்றாள் - விடுவனும்
மந்தி யவதார மேகொண்டா னைநீங்கின்
மந்தி யவதார மே.!

*** *** ***"இடுவாய் அரிதாரம்" வேடமிடுதல்.(ஒப்பனை.)

"இடுவாய் அரிதார மென்தாள்" இலக்குமியின் மென்மையான தாள்.
"மந்தி அவதார மேகொண்டான்" வானரப் படையைத் துணை கொண்ட இராமன்.
"மந்தி அவன் தாரமே" அவனுடைய மனைவியும் குரங்கே
.
பொருள்.
நண்பனே.! இவ்வாழ்வென்னும் மேடையில் நாம் வேடமிட்டு நடிப்பவர்கள். (குறுகிய.) வாழ்வில் அரியின் தாரமாகிய இலக்குமியின் தாளில் சரணடைவாய். (தெண்டனிடு.)
இதைச் செய்யாது விடுபவனும், குரங்குகளைத் துணையாகக் கொண்ட இராமனின் துணையை நீங்குபவனும், (அவன் மனைவியும்) குரங்கே.!

*** *** ***

குரங்கின் நிலையற்ற செயல்கள் மனிதருக்கு ஆகி வந்தது.
★★★

No comments: