பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Mar 2016

கடவுள் என் தோழன் 1இக்கவிதை, 28/01/2012 அன்று திருநெல்வேலி மாவட்டம் திருமலாபுரம், வடக்குத்தியான் ஆலயக் குடமுழுக்கு விழாவின் "சிறப்புக் கவியரங்கில் " பங்கேற்ற என் கவிதை.
பொதுத் தலைப்பு : இறைவன் இருப்பது யாராக..,!

1. தாயாக 2. தந்தையாக 3. ஆசானாக 4. தோழனாக 5. காதலனாக.

என் தலைப்பு...
கடவுள் என் தோழன் (1)
*************************
யாராக ஆண்டவனும் இருக்கின் றானென்
         றருமையான தலைப்பொன்றைத் தந்துள் ளார்கள்
வேரோடி வளர்ந்திருக்கும் மரங்க ளுக்கு
         மேல்தெரியும் இலையாலே பெயரை வைப்பர்
பேரோடு திரிகின்ற மனித ரெல்லாம்
         பேரொளியின் வேராலே வளர்ந்த வைதாம்
யாராக இறைவனைநாம் காண்கின் றோமோ
         அப்படியே கண்களுக்குத் தெரியும் தெய்வம்.!

....(தொடரும்)

No comments: