பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். நிறைவுரை.நிறைவுரை.
*************
பாட வேறுபாடுகள் : 
பிற நூலாசிரியர் வழி விவாதங்கள் தள்ளப்படும் என்றதற்குக் காரணமுண்டு. இயல்பான இசைப்பாடல் வடிவங்களான சிந்துப் பாடல்களை, சீர், தளை, யாப்பு எனத் தளையிட்டு மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் போக்கே அவற்றிற்கு "யாப்பியல் வழி "இலக்கணம் வகுப்பதாகும். அந்த வழி விவாதங்கள் பெரு வேறுபாடு கொண்டிருக்கும் என்பதால் விவாதத்தில் தீர்வு கிடைக்காது.

அவ்வாறு இலக்கணம் வகுத்தால் மக்களின் உணர்வுகள் நசித்து, மறக்கடிக்கப்பட்டு, பண்டிதர்களின் கைவசம் சிறைப்பட்ட தமிழ்ப் பா வகைகளைப் போலச் சிந்துப் பாடல்களும் குறுகிய வட்டத்திற்குள் அடங்கிப் போகும்.
அ.கி.ப, புலவர் குழந்தை மற்றும் சிலர் வகுத்த சிந்து இலக்கணம் மேற்கண்ட வகைத்தே.
சில சான்றுகளைப் பயிற்சிகளில் அப் பா வகைகளைக் கற்கும்போது காணலாம்.
ஆனால் முனைவர் புதுவை இரா.திருமுருகன் அவர்கள் இசையறிவின் துணைகொண்டு, மக்களின் உணர்வு வழிநின்று, உள்ளது உள்ளவாறே வகுத்த இலக்கணமே "சிந்துப் பாவியல் " ஆகும். அவை நூற்பா வடிவில் இருப்பதால் (அரங்க.நடராசனாரின் உரையுமுண்டு) தெளிவாகக் கற்பதில் சற்றுக் கடின முயற்சி வேண்டும்.
அதற்குத் தான் இந்தப் பயிற்சி "சிந்துப்பாடுக ".
பைந்தமிழ்ச் சோலையின் இப்பயிற்சியில் கலந்து கொண்டு, சிந்துப் பாடல்களைக் கற்றுத் தெளிய வேண்டி உங்களைத் தமிழால் இணைய அழைக்கிறேன். 
தமிழால் இணைவோம்!
தமிழுக்காக இணைவோம்.
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்
‪#‎முக்கியகுறிப்பு‬
சிந்துப் பாடல்களை ஓசை நயத்துடன், சந்தத்துடன் இசைத்துப் பாடிப் பழகிப் பின் எழுத வேண்டும். எனவே, 
அனைத்துப் பயிற்சிகளுக்கும் அந்தப் பாடலை நான் பாடிக் காட்டுவதைக் கேட்டு, அந்த ஓசையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டி,
"பைந்தமிழ்ச் சோலை " கட்செவிக் குழு, (வாட்ஸ் அப் குழு) வில் உங்களை இணைக்க, உங்கள் கட்செவி எண்ணை (வாட்ஸ் அப் எண்) என் அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பவும். தங்கள் பெயருடன்.
பங்கேற்கும் கவிஞர்களுக்கு மட்டுமே இந்தக் குழுவில் அனுமதி என்பதால் உங்கள் அலைபேசி எண்ணின் பாதுகாப்புக் குறித்து அஞ்ச வேண்டா. அலைபேசி எண்ணை அவர்களின் ஒப்புதலின்றி யாரும் தவறாகப் பயன்படுத்த வேண்டா என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். 
என் கட்செவி அலைபேசி எண்
9791528122.
( இந்தத் தளத்திலோ, இந்தப் பதிவிலோ அலைபேசி எண்ணை அனுப்ப வேண்டா)
★★★

No comments: